தேடல்

Tamil Radio Stations

எட்டுத் திக்கும் தமிழ் பரப்பும் தமிழ் வானொலிச் சேவைகள்

நீ

இணைத்து ம‌ன்ம‌த‌ன் | | | 0 கருத்துரைகள் »

ரோஜா செடியில் எனக்கு பிடித்தது ரோஜா பூ அல்ல,
அதன் முட்கள்தான். அதை போல அவளிடம் பிடித்தது
மென்மை அல்ல, வன்மைதான்.
பூ சிறிது நேரதில் வாடிவிடும் ஆனால் முட்களோ
வாடாது. இன்பத்தை விட துன்பதில் நீ என் நினைவில்
அதிகம் இருக்கிறாய். அரளி பூவிலும் தேன் உண்டு
அதை  போல உன் மனதிலும் அன்பு(காதல்) உண்டு. 

‘பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நாளை (மே 14ம் தேதி) காலை 9 மணிக்கு வெளியிடப்படும்’ என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
edit b +2 
தேர்வு முடிவுகள்   மாணவர்கள் & பெற்றோர் வழிகாட்டிதமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடந்த மார்ச் முதல் தேதியில் இருந்து 22ம் தேதி வரை பிளஸ் 2 தேர்வுகள் நடந்தன. 5,233 பள்ளிகள் மூலம், ஆறு லட்சத்து 89 ஆயிரத்து 687 மாணவ, மாணவியர், 1,809 மையங்களில் தேர்வை எழுதினர். கடந்த ஆண்டு, மே மாதம் 14ம் தேதி தேர்வு முடிவு வெளியான நிலையில், இந்த ஆண்டு நான்கு நாட்களுக்கு முன், கடந்த 10ம் தேதியே மாணவர்கள், முடிவுகளை எதிர்பார்த்தனர்.
இந்நிலையில், தேர்வு முடிவு வெளியாகும் தேதியை,  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘14ம் தேதி காலை 9 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தேர்வுத்துறை அறிவிக்கும் இணையதளங்கள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன’ என, தெரிவித்துள்ளார்.
தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி, நாளை காலை தேர்வுத்துறை இயக்ககத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார். அதே நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில், மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகள், அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும். இதற்கேற்ப, முடிவுகள் அடங்கிய பட்டியல், ஏற்கனவே அனைத்து மாவட் டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில், 87 பள்ளிகள் மூலம் 12 ஆயிரத்து 588 மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர். இவர்களும், தங்களது பள்ளிகளுக்குச் சென்று தேர்வு முடிவுகளை பார்க்கலாம். ரெகுலர் மாணவர்கள் மட்டுமின்றி, தனித்தேர்வு மூலம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதியுள்ளனர். இவர்கள், தேர்வெழுதிய மையங்களுக்குச் சென்று முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
நாளை முடிவுகள் வெளியானதும், ஒரு வாரத்திற்குப் பின் அந்தந்த பள்ளிகள் மூலம் மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்படும். இதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. முக்கியப் பாடங்களில் விடைத்தாள் நகல் பெற வசதி, மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு ஆகியவற்றை செய்ய விரும்பினால் அதற்கு விண்ணப்பம் செய்வதற்கான அறிவிப்பு, கட்டண விவரங்கள் ஆகியவற்றை  இயக்குனர் நாளை காலை அறிவிப்பார்.
இணைய தளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள:
கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணையங்கள் மூலம் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளளாம்.
http://pallikalvi.in/
http://results.nic.in/
http://tnresults.nic.in/
http://www.dge1.tn.nic.in/
http://www.dge2.tn.nic.in/
http://www.dge3.tn.nic.in/
http://www.kalvimalar.com/
http://www.squarebrothers.com/index-hsc.asp
http://results.southindia.com/
http://www.winentrance.com/results/tamil_nadu/12th_Std/
http://www.collegesintamilnadu.com/results/HSCResults.asp
மொபைல் போன் மூலமாக தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள :
மொபைல் மூலமாகவும் Reg.No ஐ பதிவு செய்யலாம். உதாரணம்: SPACE என்று எழுதி 562636300 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.
பொது நூலகங்களில் இலவசமாக பார்க்க ஏற்பாடு – நூலக இயக்குநர் அறிவொளி தகவல் :
பிளஸ்2 பொதுத் தேர்வு முடிவுகளை தமிழகத்தில் உள்ள அனைத்துப் பொது நூலகங்களிலும்  நாளை14-ம் தேதி, 15-தேதி, மற்றும் 16-ம் தேதி ஆகிய மூன்று நாட்கள் மாணவ, மாணவியர் இலவசமாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்து என்ன கோர்ஸ் எந்த கல்லூரில் சேரலாம் ?
பெற்றோர்கள் முதளில் தமது பிள்ளைகள்   எந்த துறையில்(Arts & Science, Catering & Hotel management, Engineering, management, Medical / Parameidcal, Polytechnic, Teacher Education, etc,.) தமது  மேற்படிப்பை தொடர விருப்பம் என்பற்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் சேரவிருக்கும் கல்லூரியை தேர்ந்தெடுக்கலாம்.
தேர்ந்தெடுத்த  கோர்ஸ் எந்த கல்லூரில் உள்ளது ?
இந்த கோர்ஸ்தான் படிக்க வேண்டும் என முடிவு எடுத்தவுடன்,  நாம் அடுத்து செய்ய வேண்டியது எந்த கல்லூரில் அந்த கோர்ஸ் உள்ளது. அந்த கல்லூரியின் கல்வி தரம்  நாம் எதிர்பார்க்கும் வகையில் உள்ளதா என ஆராய்தல் வேண்டும். ஒரே கல்லூயில் மட்டும் விண்ணப்பம் கொடுத்துவிட்டு அப்படியே விட்டு விடாதீர்கள். நீங்கள் விரும்பிய கோர்ஸ் பயிற்றுவிக்கும் மற்ற சில கல்லூரிகளுக்கும் விண்ணப்பம் கொடுப்பது கூடுதல் நன்மை பயக்கும். பல்வேறு  கோர்ஸ் மற்றும் கல்லூரியை தேட இங்கே  க்ளிக் செய்யவும். http://www.collegesintamilnadu.com/
மேற்படிப்பு பயில பணம் இல்லையா ? கவலை வேண்டாம்!

கல்வி கற்பதற்கு பணம் ஒரு தடையல்ல. மேற்படிப்பு தொடரும் மாணவர்கள் அனைவருக்கும் பல்வேறு கல்வி கடன் (ஸ்காலர்ஷிப் ) அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.  இதை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் கல்வி செலவை செய்து கொள்ளளாம். மாணவர்களுக்கு என்னென்ன கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது அதை எவ்வாறு பெறுவது போன்ற முழு விபரங்களை காண இங்கே க்ளிக் செய்யவும். http://www.vanuronline.com/?cat=8 இந்தப்பகுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்துவித சலுகைகள் மற்றும் அதை பெறுவதற்கான வழிமுறைகள் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.
: :: தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களின் பெற்றோர் கவனத்திற்கு :::
உங்கள் பிள்ளைகள் தேர்வு முடிவில் எவ்வளவு மதிப்பெண் பெற வேண்டும் எந்த கல்லூயில் என்ன கோர்ஸ் படிக்கவேண்டும் என்பது உங்கள் கனவு /லட்சியமாக இருந்திருக்கலாம்.
எதிர்பாராத காரணத்தால் தோல்வியை தழுவிய மாணவர்களின் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை.
1. எக்காரணத்தை கொண்டும் தேர்வில் தோல்வியடைந்த பிள்ளைகளை மணம் நோகும்படி பேசாதீர்கள்
2. தோல்வியை தழுவிய பிள்ளைகளுக்கு முதலில் தோள்கொடுத்து ஆறுதல் கூறுவது பெற்றோராகிய நீங்களாக இருங்கள்.
3. பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை வரும் வண்ணம் அவர்களிடம் பேசுங்கள். நல்ல நண்பனாய் பழகுங்கள்.
தோல்வியுள்ள பாடத்தை மீண்டும் எழுதும் முறை!
பிளஸ்2 தேர்வில் தோல்வியுற்றால் மீண்டும் தமது மேற்படிப்பை தொடர ஓரு வருடம் காத்துகிடக்க தேவையில்லை. தோல்வியுற்ற பாடத்தை மீண்டும் உடனடியாக எழுதி இதே கல்வியாண்டில் சக மாணவர்களுடன் மேற்படிப்பிற்கு செல்ல நமது கல்வி துறை வழிவகை செய்துள்ளது.
இந்த சிறப்பு தேர்விற்கான விண்ணப்பம் எப்பொழுது எங்கு கிடைக்கும் போன்ற விபரங்களை பிள்ளைகள் படித்த பள்ளி தலைமை ஆசிரியர் வழிகாட்டுதல் படி செய்யலாம். அவ்வப்போது நாளேடுகளிலும் இதுபற்றிய தகவல் வெளியாகும்.  இந்த தேர்வு ஒரு மாத காலத்திற்குள் நடைபெறும். இதற்குள் தமது பிள்ளை எந்த பாடத்தில் தோல்வியுற்றார்களோ அந்த பாடத்திற்கான  கூடுதல் பயிற்சி பெறுவதற்கான வழி முறையை தேடுங்கள் (டுட்டோரியல் காலேஜி, டிவ்ஷன், etc)
பிளஸ் 2 தேர்வு முடிவிற்காக காத்திருக்கும் ஆறு லட்சத்து 89 ஆயிரத்து 687 சகோதர சகோதரிகளும் எனது பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள்.