தேடல்

Tamil Radio Stations

எட்டுத் திக்கும் தமிழ் பரப்பும் தமிழ் வானொலிச் சேவைகள்

நீ

இணைத்து ம‌ன்ம‌த‌ன் | | | 0 கருத்துரைகள் »

ரோஜா செடியில் எனக்கு பிடித்தது ரோஜா பூ அல்ல,
அதன் முட்கள்தான். அதை போல அவளிடம் பிடித்தது
மென்மை அல்ல, வன்மைதான்.
பூ சிறிது நேரதில் வாடிவிடும் ஆனால் முட்களோ
வாடாது. இன்பத்தை விட துன்பதில் நீ என் நினைவில்
அதிகம் இருக்கிறாய். அரளி பூவிலும் தேன் உண்டு
அதை  போல உன் மனதிலும் அன்பு(காதல்) உண்டு. 

‘பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நாளை (மே 14ம் தேதி) காலை 9 மணிக்கு வெளியிடப்படும்’ என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
edit b +2 
தேர்வு முடிவுகள்   மாணவர்கள் & பெற்றோர் வழிகாட்டிதமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடந்த மார்ச் முதல் தேதியில் இருந்து 22ம் தேதி வரை பிளஸ் 2 தேர்வுகள் நடந்தன. 5,233 பள்ளிகள் மூலம், ஆறு லட்சத்து 89 ஆயிரத்து 687 மாணவ, மாணவியர், 1,809 மையங்களில் தேர்வை எழுதினர். கடந்த ஆண்டு, மே மாதம் 14ம் தேதி தேர்வு முடிவு வெளியான நிலையில், இந்த ஆண்டு நான்கு நாட்களுக்கு முன், கடந்த 10ம் தேதியே மாணவர்கள், முடிவுகளை எதிர்பார்த்தனர்.
இந்நிலையில், தேர்வு முடிவு வெளியாகும் தேதியை,  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘14ம் தேதி காலை 9 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தேர்வுத்துறை அறிவிக்கும் இணையதளங்கள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன’ என, தெரிவித்துள்ளார்.
தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி, நாளை காலை தேர்வுத்துறை இயக்ககத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார். அதே நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில், மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகள், அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும். இதற்கேற்ப, முடிவுகள் அடங்கிய பட்டியல், ஏற்கனவே அனைத்து மாவட் டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில், 87 பள்ளிகள் மூலம் 12 ஆயிரத்து 588 மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர். இவர்களும், தங்களது பள்ளிகளுக்குச் சென்று தேர்வு முடிவுகளை பார்க்கலாம். ரெகுலர் மாணவர்கள் மட்டுமின்றி, தனித்தேர்வு மூலம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதியுள்ளனர். இவர்கள், தேர்வெழுதிய மையங்களுக்குச் சென்று முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
நாளை முடிவுகள் வெளியானதும், ஒரு வாரத்திற்குப் பின் அந்தந்த பள்ளிகள் மூலம் மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்படும். இதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. முக்கியப் பாடங்களில் விடைத்தாள் நகல் பெற வசதி, மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு ஆகியவற்றை செய்ய விரும்பினால் அதற்கு விண்ணப்பம் செய்வதற்கான அறிவிப்பு, கட்டண விவரங்கள் ஆகியவற்றை  இயக்குனர் நாளை காலை அறிவிப்பார்.
இணைய தளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள:
கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணையங்கள் மூலம் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளளாம்.
http://pallikalvi.in/
http://results.nic.in/
http://tnresults.nic.in/
http://www.dge1.tn.nic.in/
http://www.dge2.tn.nic.in/
http://www.dge3.tn.nic.in/
http://www.kalvimalar.com/
http://www.squarebrothers.com/index-hsc.asp
http://results.southindia.com/
http://www.winentrance.com/results/tamil_nadu/12th_Std/
http://www.collegesintamilnadu.com/results/HSCResults.asp
மொபைல் போன் மூலமாக தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள :
மொபைல் மூலமாகவும் Reg.No ஐ பதிவு செய்யலாம். உதாரணம்: SPACE என்று எழுதி 562636300 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.
பொது நூலகங்களில் இலவசமாக பார்க்க ஏற்பாடு – நூலக இயக்குநர் அறிவொளி தகவல் :
பிளஸ்2 பொதுத் தேர்வு முடிவுகளை தமிழகத்தில் உள்ள அனைத்துப் பொது நூலகங்களிலும்  நாளை14-ம் தேதி, 15-தேதி, மற்றும் 16-ம் தேதி ஆகிய மூன்று நாட்கள் மாணவ, மாணவியர் இலவசமாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்து என்ன கோர்ஸ் எந்த கல்லூரில் சேரலாம் ?
பெற்றோர்கள் முதளில் தமது பிள்ளைகள்   எந்த துறையில்(Arts & Science, Catering & Hotel management, Engineering, management, Medical / Parameidcal, Polytechnic, Teacher Education, etc,.) தமது  மேற்படிப்பை தொடர விருப்பம் என்பற்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் சேரவிருக்கும் கல்லூரியை தேர்ந்தெடுக்கலாம்.
தேர்ந்தெடுத்த  கோர்ஸ் எந்த கல்லூரில் உள்ளது ?
இந்த கோர்ஸ்தான் படிக்க வேண்டும் என முடிவு எடுத்தவுடன்,  நாம் அடுத்து செய்ய வேண்டியது எந்த கல்லூரில் அந்த கோர்ஸ் உள்ளது. அந்த கல்லூரியின் கல்வி தரம்  நாம் எதிர்பார்க்கும் வகையில் உள்ளதா என ஆராய்தல் வேண்டும். ஒரே கல்லூயில் மட்டும் விண்ணப்பம் கொடுத்துவிட்டு அப்படியே விட்டு விடாதீர்கள். நீங்கள் விரும்பிய கோர்ஸ் பயிற்றுவிக்கும் மற்ற சில கல்லூரிகளுக்கும் விண்ணப்பம் கொடுப்பது கூடுதல் நன்மை பயக்கும். பல்வேறு  கோர்ஸ் மற்றும் கல்லூரியை தேட இங்கே  க்ளிக் செய்யவும். http://www.collegesintamilnadu.com/
மேற்படிப்பு பயில பணம் இல்லையா ? கவலை வேண்டாம்!

கல்வி கற்பதற்கு பணம் ஒரு தடையல்ல. மேற்படிப்பு தொடரும் மாணவர்கள் அனைவருக்கும் பல்வேறு கல்வி கடன் (ஸ்காலர்ஷிப் ) அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.  இதை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் கல்வி செலவை செய்து கொள்ளளாம். மாணவர்களுக்கு என்னென்ன கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது அதை எவ்வாறு பெறுவது போன்ற முழு விபரங்களை காண இங்கே க்ளிக் செய்யவும். http://www.vanuronline.com/?cat=8 இந்தப்பகுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்துவித சலுகைகள் மற்றும் அதை பெறுவதற்கான வழிமுறைகள் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.
: :: தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களின் பெற்றோர் கவனத்திற்கு :::
உங்கள் பிள்ளைகள் தேர்வு முடிவில் எவ்வளவு மதிப்பெண் பெற வேண்டும் எந்த கல்லூயில் என்ன கோர்ஸ் படிக்கவேண்டும் என்பது உங்கள் கனவு /லட்சியமாக இருந்திருக்கலாம்.
எதிர்பாராத காரணத்தால் தோல்வியை தழுவிய மாணவர்களின் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை.
1. எக்காரணத்தை கொண்டும் தேர்வில் தோல்வியடைந்த பிள்ளைகளை மணம் நோகும்படி பேசாதீர்கள்
2. தோல்வியை தழுவிய பிள்ளைகளுக்கு முதலில் தோள்கொடுத்து ஆறுதல் கூறுவது பெற்றோராகிய நீங்களாக இருங்கள்.
3. பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை வரும் வண்ணம் அவர்களிடம் பேசுங்கள். நல்ல நண்பனாய் பழகுங்கள்.
தோல்வியுள்ள பாடத்தை மீண்டும் எழுதும் முறை!
பிளஸ்2 தேர்வில் தோல்வியுற்றால் மீண்டும் தமது மேற்படிப்பை தொடர ஓரு வருடம் காத்துகிடக்க தேவையில்லை. தோல்வியுற்ற பாடத்தை மீண்டும் உடனடியாக எழுதி இதே கல்வியாண்டில் சக மாணவர்களுடன் மேற்படிப்பிற்கு செல்ல நமது கல்வி துறை வழிவகை செய்துள்ளது.
இந்த சிறப்பு தேர்விற்கான விண்ணப்பம் எப்பொழுது எங்கு கிடைக்கும் போன்ற விபரங்களை பிள்ளைகள் படித்த பள்ளி தலைமை ஆசிரியர் வழிகாட்டுதல் படி செய்யலாம். அவ்வப்போது நாளேடுகளிலும் இதுபற்றிய தகவல் வெளியாகும்.  இந்த தேர்வு ஒரு மாத காலத்திற்குள் நடைபெறும். இதற்குள் தமது பிள்ளை எந்த பாடத்தில் தோல்வியுற்றார்களோ அந்த பாடத்திற்கான  கூடுதல் பயிற்சி பெறுவதற்கான வழி முறையை தேடுங்கள் (டுட்டோரியல் காலேஜி, டிவ்ஷன், etc)
பிளஸ் 2 தேர்வு முடிவிற்காக காத்திருக்கும் ஆறு லட்சத்து 89 ஆயிரத்து 687 சகோதர சகோதரிகளும் எனது பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள்.

HSC / SSLC Examination Results 2010

இணைத்து ம‌ன்ம‌த‌ன் | |

Government of Tamil Nadu
Directorate of Government Examinations

HSC / SSLC  Examination Results 2010

|| Plus 2 Examination Results Expected on 14th May 2010 at 9.30 A.M. || 

பையா

இணைத்து ம‌ன்ம‌த‌ன் | | | 0 கருத்துரைகள் »

பையா படத்தோட  டவுன்லோட் லிங்க் part1



 பையா படத்தோட  டவுன்லோட் லிங்க் part2 End

உங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா ?..ஒரே நொடியில் கண்டு பிடிக்கலாம் வாங்க.

இணையம் மற்றும் சாதாரணமாக கணினி உபயோகிப்போருக்கு இருக்கும் பெரும் தொல்லை இந்த வைரஸ் (virus) .நிறைய பணம் குடுத்து வைரஸ் மென்பொருளை update செய்திருந்தாலும் சில சமயம் எப்படியாவது இந்த வைரஸ் நம் கணினியில் புகுந்து விடும் .நாம் instal செய்துள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா இல்லையா என்று எப்படி கண்டு பிடிப்பது .கீழே உள்ள code(நீல
நிறம் )
ஐ copy செய்து notepad இல் இடவும் பின்பு அதை fakevirus.exe என save செய்யவும்


X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*


. உங்கள் antivirus ஒழுங்காக வேலை செய்தால் நீங்கள் save செய்த இந்த கோப்பு உடனே delete செய்யப்பட்டு விடும் .அப்படி delete ஆகவில்லை என்றால் உங்கள் antivirus ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று அர்த்தம் .இலவசமாக avast antivirus டவுன்லோட் செய்ய வேண்டும் என்றால் கீழே உள்ள லிங்கை சொடுக்கி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்

avast antivirus free download

பல புறோகிறாம்கள் நிறுவப்படும்போது அவைக்குரிய Shortcut Icon கள் Desktop ல் போடப்படுகின்றன. இந்த Icon களை Shortcut Icon என அடையாள படுத்துவதற்க்காக இடது பக்க கீழ் மூலயில் ஓர் அம்புக்குறி இடப்படுகின்றன. Icon களில் உள்ள அம்புக்குறிகளை மாத்திரம் நீக்கும்போது திரை அழகாக தென்படும். விரும்பியவர்கள் நீக்கிக்கொள்ளலாம். றிஜிஸ்ரியில் மாற்றம் செய்வதனூடாகவே இதை செய்ய முடியும்.

மாற்றம் செய்வதன்முன் Inkfile என்கிற Key யை export பண்ணி சேமித்துக்கொள்ளவேண்டும். அதன் பின்

Start -->Run--> Regedit> HKEY_CLASSES_ROOT என்பதன் இடது பக்கம் உள்ள + அடையாளத்தை கிளிக்பண்ணி விரிக்கவும்- கீழ்நோக்கி போய் LNKFILE என்னும் போடரை ஒருமுறை கிளிக்பண்ணவும் அடுத்து வலது பக்கம் IsShortcut என்று காணப்படும் Value ஐ கிளிக்பண்ணி Delete பண்ணவும். கம்பியூட்டரை Reboot பண்ணவும்.

அம்புக்குறிகள் இன்றி திரை அழகாக தென்படும்

வீடியோ கோப்புகளை கண்டு ரசிக்க யூடியூபும் இருக்கிறது. யூடியூப் போல மேலும் பல தளங்களும் உள்ளன.இவற்றில் சாமானியர்கள் சமர்பித்த வீடியோ காட்சிகள் முதல் திரைப்பட காட்சிகள் வரை லடசக்கணக்கான கோப்புகளை காண முடியும்.

ஆனால நீங்கள் தேடும் அல்லது மிகவும் விரும்பும் வீடியோ கோப்புகளை தேடுவது கடினமானதாகவே இருக்கும்.

இந்த குறையை போக்கும் வகையில் வீடியோ கோப்புகளை தேட உதவும் புதிய தேடியந்திரம் அறிமுகமாகியுள்ளது. ஒவாக்ஸ்http://www.owaks.com
என்னும் இந்த தேடியந்திரத்தில் கூகுலில் தகவல்களை தேடுவது போலவே வீடியோ காட்சிகளையும் எளிதாக தேடலாம்.

தேடும் வசதி இருப்பதோடு தளத்தில் தேட்படுவதில் புகழ்பெற்று விளங்கும் வீடியோ கோப்புகளையும் குறிச்சொற்களின் அடிப்படையில் பார்த்து ரசிக்கலாம்.

வீடியோ படங்களுக்கு யு–ட்யூப் ஓர் அருமையான தளம். நம் படங்களையும் அங்கு அப் லோட் செய்து உலகிற்குக் காட்டலாம். ஆனால் இவற்றை நாம் டவுண்லோட் செய்ய முடியாதபடி, யு ட்யூபில் இவை இடம் பெறுகின்றன. ஆனாலும் புரோகிராமர்கள், யு-ட்யூப் தளத்தில் உள்ள வீடியோ படங்களை டவுண்லோட் செய்திட பல புரோகிராம்களை இலவசமாகத் தந்து வருகின்றனர். கூகுள் தேடல் தளம் சென்று "youtube video download" என டைப் செய்தால் போதும்; இந்த புரோகிராம்கள் கிடைக்கும் தளங்களின் பட்டியல் கிடைக்கும். இவற்றை இன்ஸ்டால் செய்து, வீடியோ படங்களை நம் கம்ப்யூட்டரில் காப்பி செய்து இயக்கலாம். ஆனால் இவற்றில் பலவற்றில் ஏதேனும் ஒரு சிக்கல் இருக்கும். 60 சதவீதம் படம் மட்டுமே வரும். முழுவதும் வேண்டும் என்றால் பணம் கட்டச் சொல்வார்கள். அல்லது விளம்பரங்கள் படத்தின் குறுக்கே ஓடும். 
இவை எதுவும் இன்றி மிக எளியமுறையில், கட்டுப்பாடு எதுவும் இன்றி, யு ட்யூப் படங்களை டவுண்லோட் செய்வதற்கான குறிப்பு ஒன்றினைக் காண நேர்ந்தது. அது மிக எளிதான தாகவும், சிக்கலற்றதாகவும் உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், எந்த யு–ட்யூப் தளத்திலிருந்து வீடியோ படம் வேண்டுமோ அங்கு செல்லவும். இயக்கிப் பார்த்து அது தான் உங்களுக்குத் தேவையா என உறுதி செய்து கொள்ளவும். இப்போது அதன் இன்டர்நெட் வெப்சைட் முகவரி விண்டோ செல்லவும். எடுத்துக் காட்டாக அந்த முகவரி கீழ்க்கண்ட படி இருப்பதாக வைத்துக் கொள்வோம். 
http://www.youtube.com/results?search_query=thillana+remix&search_type=&aq=f இதில்youtube  என்ற சொல்லில் 'y' என்பதற்குப் பதிலாக 3 என டைப் செய்து என்டர் தட்டவும். முகவரி கீழ்க்கண்டபடி மாறும்.http://www.3outube.com/results? search_query=thillana+ remix&search_type=&aq=f அவ்வளவு தான்; நீங்கள் வேறு ஒரு டவுண்லோட் தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு இந்த வீடியோ படத்தை எந்த வகை பைல் வடிவில் வேண்டும் என ஒரு திரை கிடைக்கும். இதில் எம்பி4 அல்லது எப்.எல்.வி. என இரண்டு சாய்ஸ் இருக்கும். எது உங்களுக்குத் தேவையோ, அந்த ஆப்ஷனில் கிளிக் செய்தால் உடனே சில நிமிடத்தில் வீடியோ படம் டவுண்லோட் செய்யப்படும். பின் அந்த வீடியோவினை எப்போது வேண்டுமானாலும் இயக்கிப் பார்க்கலாம். இதில் என்ன வேடிக்கை என்றால், இந்த தள ரசிகர்களுக்கு பேஸ்புக்கில் ஒரு கிளப் உள்ளது. இங்கு நீங்கள் சேர்ந்து தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம். 


ஒரே கம்ப்யூட்டரை அலுவலகத்திலும், வீட்டிலும் பலர் பயன்படுத்தும் சூழ்நிலை இன்று எங்கும் காணப்படுகிறது. இதனால் ஒருவரின் உழைப்பில் உருவான பைலை மற்றவர்கள் திருத்தாமல் இருக்கவும், மேலும் மற்றவர்கள் அறியாமல் இருக்கவும் இது போல பாதுகாக்க வேண்டியதுள்ளது.  இத்தகைய தேவைகளை நிறைவேற்று வதற்கென பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் அதிக எண்ணிக்கையில் இன்டர்நெட்டில் உள்ளன. இங்கு தேர்ட் பார்ட்டி என்பது மைக்ரோசாப்ட் இல்லாமல் மற்ற சாப்ட்வேர் தயாரிப்பவர்கள் தயாரித்து வழங்கும் புரோகிராம்களாகும். ஆனால் இவற்றை எந்த அளவிற்கு நம்ப முடியும் என்பது ஒரு கேள்விக் குறியே. எனவே நாம் விண்டோஸ் தயாரித்து வழங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் வசதிகளையே காணலாம். 

ஒரு போல்டரை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாப்பது என்று ஏற்கனவே பல முறை எழுதி உள்ளோம். பாதுகாக்க வேண்டிய போல்டரைத் தேர்ந்தெடுத்து, ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ஷேரிங் அண்ட் செக்யூரிட்டி என்ற பிரிவில் கிளிக் செய்தால் அங்கு போல்டருக்கு பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாப்பதற்கான வழிகள் தரப்பட்டிருக்கும். மேலும் ஒரு வழியினை இங்கு பார்க்கலாம். இந்த செயலை மேற்கொள்ள நமக்கு கிடைக்கும் கட்டளை Attrib  என்பதாகும். இந்த சொல் ஒரு பொருளுக்கு நாம் அமைக்கும் பண்பினைக் குறிக்கிறது. இங்கு ஒரு பைலுக்கு நாம் அளிக்கும் பண்பே அது. படிக்க மட்டும், மறைத்து வைக்க மற்றும் சிஸ்டம் பயன்படுத்த (Read only, Hidden and System attributes)  என மூன்று வகைகளில் பொதுவாக பண்புகளை கொடுக்கலாம். கீழ்க்காணும் வழிகளில் செயல்பட்டு உங்கள் போல்டருக்கு இந்த பண்புகளை அளிக்கலாம். இதற்கு உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் அட்மினிஸ்ட் ரேட்டராக லாக் இன் செய்திருக்க வேண்டும். இனி மறைக்க வேண்டிய தகவல் உள்ள பைல்களை அடைத்து வைக்க ஒரு புதிய போல்டர் ஒன்றை உருவாக்கவும். எடுத்துக் காட்டாக உட்ரைவில் Personal  என ஒரு போல்டரை உருவாக்கலாம். இதில் அனைத்து பைல்களையும் கொண்டு வரவும். மறைக்கப்பட வேண்டிய இந்த பைல்களுக்கு காப்பி பைல்கள் வேறு எங்கும் இருக்கக்கூடாது. பின் Start  பட்டன் அழுத்தி ரன் பாக்ஸில் CMD  என டைப் செய்திடவும். பின்Ok அழுத்த உங்களுக்கு டாஸ் இயக்க கட்டளைப் புள்ளி (command prompt) கிடைக்கும். இங்கு நீங்கள் குறிப்பிட்ட பைல்கள் அடங்கிய மறைத்து வைத்திட வேண்டும் என்று திட்டமிடுகின்ற போல்டரின் பெயரை அதற்கான பாத் உடன் பின்வருமாறு டைப் செய்திட வேண்டும். இங்குள்ள எடுத்துக்காட்டின்படி அந்த கட்டளைச் சொற்கள் "attrib +s +h E:\Personal" என இருக்க வேண்டும். (மேற்கோள் குறிகள் டைப் செய்யப்படக்கூடாது) இந்த கட்டளை உங்கள் ஈச்tச் போல்டரை E  டிரைவில் மறைத்து வைத்திடும். உடனே நீங்கள் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்து சோதித்துக் கொள்ளலாம். இவ்வாறு மறைத்து வைத்திருப்பதை "Show hidden files and folders"  என்ற கட்டளை கொடுத்தெல்லாம் பார்க்க முடியாது. சரி, மறைத்து வைத்துவிட்டீர்கள். என்றாவது ஒரு நாள் அல்லது ஒரு நேரம் இதனை வெளியே தெரியும் படி வைக்க எண்ணலாம். அல்லது மேலும் சில பைல்களை, இதன் பின் மறைத்து வைக்க எண்ணி, இந்த போல்டரில் போட்டு வைக்க திட்டமிடலாம். அப்போது "attrib s h E:\Personal"என டைப் செய்திட வேண்டும். இதற்கு இந்த போல்டரின் பெயர் மற்றும் டைரக்டரியின் பெயர் உங்களுக்கு நினைவில் இருக்க வேண்டும். 
ஒரு பைலை மட்டும் தனியாக மறைக்க, அதற்கு மட்டும் ஒரு பாஸ்வேர்ட் கொடுப்பது பற்றி இங்கு ஏற்கனவே தகவல்கள் தரப்பட்டுள்ளன. ஒரு பைலை யாரும் எதற்கும் அனுமதிக்காத வகையில் பாஸ்வேர்ட் தரலாம். அல்லது பார்ப்பதற்கு மட்டும் அனுமதிக்கலாம். எடிட் செய்வதனைத் தடை செய்திடலாம். இந்த வசதிகள் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள புரோகிராம்கள் அனைத்திற்கும் உள்ளன. 


எடுத்துக்காட்டாக வேர்டில் உருவாக்கப்படும் ஒரு பைலுக்கு எப்படி பாஸ்வேர்ட் கொடுப்பது என்று பார்க்கலாம். 
பைலைத் திறந்து பின் File > save as எனச் செல்லவும். இப்போது Save   அண் விண்டோ கிடைக்கும். இந்த விண்டோவின் வலது மூலையில் டூல்ஸ் என்று ஒரு பிரிவு இருக்கும். இதில் கிளிக் செய்திடவும். கீழாக விரியும் மெனுவில் Security Options என்று ஒரு பிரிவு இருக்கும். இதில் Password to Open, Password to Modify என்று இரு பிரிவுகள் இருக்கும். இதில் எந்த வகையில் நீங்கள் பைலை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க வேண்டுமோ அந்த வகையில் பாஸ்வேர்ட் கொடுக்கலாம். ஆனால் கொடுத்த பாஸ்வேர்டினை நினைவில் வைத்திருக்க வேண்டும்.


ஜி-மெயில்கள் உங்கள் கம்ப்யூட்டரில்
ஜிமெயில் என்னும் கூகுள் சர்வரில் நீங்கள் இமெயில் அக்கவுண்ட் வைத்திருந்தால், அந்த சர்வர் சென்று அதில் உள்ள உங்களுக்கான இன்பாக்ஸைத் திறந்து மெயில்களைப் பார்க்கிறீர்கள். இணைய இணைப்பு இல்லாத போது ஏற்கனவே வந்த மெயில்களைப் பார்க்க வேண்டும் என்றால் பார்க்க முடியாது. ஏனென்றால் அவை கூகுள் சர்வரில் தான் சேமித்து வைக்கப்படுகின்றன. இதற்கு மாறாக உங்கள் கம்ப்யூட்டரிலேயே அவற்றைக் கொண்டு வந்து, சேமித்து வைத்து, விரும்பும்போது இணைய இணைப்பின்றி அவற்றைக் காணும் வசதியை, கூகுள் தருகிறது. இதனை எப்படி செட் செய்வது என்று பார்ப்போம்.
முதலில் உங்கள் கூகுள் அக்கவுண்ட்டில் கூகுள் Gears  என்னும் புரோகிராம் நிறுவப்பட்டிருக்க வேண்டும். இல்லை எனில்  http://tools.google.com/ gears என்ற தளம் செல்லவும். அங்கு கூகுள் கியர்ஸ் நிறுவுவதற்குத் தேவையான புரோகிராமின டவுண்லோட் செய்திடவும். பின் அதனை இயக்கி இன்ஸ்டால் செய்திடவும். இதன் பின் உங்கள் பிரவுசரை மீண்டும் இயக்கவும். பின்னர் ஜிமெயில் அக்கவுண்ட் சென்று அங்கு more கிளிக் செய்து அதில் Labs என்பதைத் தேர்வு செய்திடவும். இங்கு வரிசையாக நிறைய இது போன்ற வசதிகள் தரப்பட்டிருக்கும். அதில் offline enable என்று உள்ள இடத்திற்குச் சென்று அங்கு அந்த வசதியை enable  செய்திடவும். அவ்வாறு தரப்பட்டுள்ள இடத்தில் உள்ள ரேடியோ பட்டனைக் கிளிக் செய்தால் போதும். பின் இதன் கீழ் கடைசியாகச் சென்று Save பட்டன் அழுத்தி சேவ் செய்திடவும்.


பின்னர் உங்களின் ஜிமெயில் இன்பாக்ஸ் வரவும். இங்கு செட்டிங்ஸ் அருகில் உள்ள Offline கிளிக் செய்திடவும். அதன் பின் கிளிக் நெக்ஸ்ட் கிளிக் செய்திடுக. அடுத்ததாக install offline access for gmail  என்று கேட்கையில் அடுத்துள்ள Next பட்டன் கிளிக் செய்திடவும். அடுத்தபடியாக Permissionகேட்கையில் ஓகே கொடுக்கவும். பின் ஜிமெயில் உங்கள் டெஸ்க்டாப்பிற்கு வந்துவிடும். இனி உங்கள் மெயில் யாவும் உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் ஆகும். உங்கள் கம்ப்யூட்டரிலேயே டவுண்லோட் ஆவதால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் மெயிலைப் படிக்கலாம்.


வழி நடத்தும் இன்டர்பேஸ்
மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டர்களைப் பற்றி எழுதுகையில் அதில் பயன்படுத்தப்படும் யூசர் இன்டர்பேஸ் மிகச் சிறப்பாக உள்ளது என்ற தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதன் பொருள் என்ன? ஒவ்வொருவரும் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் ஒன்றை எண்ணிக் கொண்டு இதுதான் யூசர் இன்டர்பேஸ் என்று எண்ணிக் கொண்டு செல்கின்றனர். இது எதனைக் குறிக்கிறது? இதன் செயல்பாடு என்ன என்று பார்ப்போமா?
கம்ப்யூட்டரில் ஒவ்வொரு முறை நீங்கள் ஒன்றைப் பயன்படுத்தத் தொடங்குகையில், யூசர் இன்டர்பேஸ் என்னும் இந்த வழி நடத்தும் வசதியைச் சந்திக்கிறோம். அந்த புரோகிராமோடு அல்லது கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட இருக்கும் துணை சாதனத்தோடு உங்களை இணைத்து வழி நடத்தும் வேலையை இந்த யூசர் இன்டர்பேஸ் செய்கிறது. இந்த இன்டர்பேஸ் என்பதில் பல துணை சாதனங்கள் இருக்கும். மெனு, லிங்க், பட்டன், பைல், சவுண்ட் போன்ற அனைத்தும் கலந்தே ஒரு யூசர் இன்டர்பேஸாக உருவெடுக்கிறது. 
எடுத்துக்காட்டாக, ஒரு புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடு கையில், முதல் முதலில் நீங்கள் சந்திப்பது அதன் யூசர் இன்டர்பேஸைத்தான். அந்த புரோகிராமினை இயக்கி, அதன் பயனைப் பெற உங்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாய் இது வழிகாட்டும். எனவே தான் சாமானியர்களும் புரிந்து கொள்ளும் வகையில் இவை மிக எளிதாகத் தகவல்களைக் காட்டி, அதில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியதையும், பல ஆப்ஷன் களாகத் தருகிறார்கள்,. இந்த இன்டர்பேஸ்களும் பல வகைகளில் வடிவமைக்கப்படுகின்றன. சில கிராபிக்ஸ் வடிவங்களில் அமைக் கப்படும். அல்லது எச்.டி.எம்.எல். பைலாக, ஓர் இணைய தள பக்கமாகக் காட்டப்படும். சில கட்டளை வரிகளாகக் காட்டப்பட்டு, உங்களிடமிருந்து பதில் தகவலை வாங்கிச் செயல்படும்.

நீங்கள் எத்தகைய புரோகிராமினைப் பயன்படுத்தத் தொடங்குகிறீர்கள் என்ப தைப் பொறுத்து இது அமையும். தொடக்கத்துடன் இல்லாமல், புரோகிராம் பயன்படும் காலம் முழுவதும் இந்த இன்டர்பேஸ் வழி காட்டிக் கொண்டே இருக்கும். இதன் எளிய சிறப்பான தன்மை ஒரு புரோகிராமின் பயன்தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் இருக்கும்

விண்டோஸ் தொகுப்பில் செயல்படும் சில ஆச்சரியப்படத்தக்க புரோகிராம்கள் சிலவற்றைக் காண நேர்ந்தது. இவை வழக்கத்திலிருந்து சற்று மாறுபட்ட வையாக இருந்ததனால் இங்கு விபரங்கள் தரப்படுகின்றன.

1. ஐகால்சி – iCalcy

உங்களுக்கு ஐபோன் மிகவும் பிடிக்குமா? இந்த புரோகிராமிற்கும் ஐ போனுக்கும் என்ன சம்பந்தம்? ஐ போன் கிடைக்குமா என்ன? என்றெல்லாம் கேள்விகளைக் கேட்க வேண்டாம். இது ஒரு கால்குலேட்டர்; இந்த கால்குலேட்டர் ஒரு ஐபோன் வடிவில் உங்களுக்கு மானிட்டரில் கிடைக்கும். அதனால் தான் இதன் பெயர் iCalcy. இது வழக்கமான, ஒரு சாதாரண கால்குலேட்டர் என்ன செய்திடுமோ அவை அனைத்தையும் செய்து காட்டும். ஐ போன் போல அகலவாக்கிலும் தோற்றம் தரும். ஜஸ்ட், ஒரு மாறுதலுக்கு இதனை இலவசமாக டவுண்லோட் செய்து பதிந்து இயக்கிப் பாருங்களேன். இந்த புரோகிராம் http://aviassin.wikidot.com/icalcy என்ற முகவரியில் இலவசமாக டவுண்லோ செய்து கொள்ள கிடைக்கிறது.
2. விண்டோஸ் 7 சூப்பர் பார்:
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து வெளியான தகவல்களில் அதன் தோற்றங்கள் சிலவற்றில், சிலருக்கு ஆர்வம் இருக்கலாம். இந்த சிஸ்டத்தின் சைட் பார் விஸ்டாவின் டாஸ்க் பார் போல இருப்பதாகப் பலர் கூறியுள்ளனர். இந்த விருப்பத்தின் அடிப்படையில் சீன கம்ப்யூட்டர் பொறியாளர் ஒருவர் டாஸ்க் பாரினைச் சற்று மாற்றி விண்டோஸ் 7 சூப்பர் பார் போல அமைத்துத் தந்துள்ளார். இந்த புரோகிராம் இலவசமாக http://flarejune.dev...rVista104078306 என்னும் முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. இதனை டவுண்லோட் செய்து இயக்கிப் பார்த்தும் கிடைக்கவில்லை எனில், உங்கள் கம்ப்யூட்டரில் மைக்ரோசாப்ட் விசுவல் சி ப்ளஸ் ப்ளஸ் 2008 இல்லை என்று பொருள். அதனை இன்ஸ்டால் செய்து பின் இந்த புரோகிராமினை இயக்க வேண்டும். இந்த விசுவல் சி++ புரோகிராம் கிடைக்க http://www. microsoft.com /downloads /details.aspx? familyid= A5C842753B974AB7A40D3802B2AF5FC2&displaylang=en என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
3. கிளாஸ் சி.எம்.டி. (GlassCMD) "டெஸ்க்டாப்பில் கிடைக்கும் விண்டோ எல்லாம், சும்மா பளபளன்னு இருக்கணும்; அடுத்த பக்கம் ஊடுறுவித் தெரியும்படி கண்ணாடியா இருக்கணும்'' என்று என் நண்பர் ஒருவர் கதை அடித்துக் கொண்டிருப்பார். அவரைப் போன்ற விருப்பம் உள்ள நபர்களுக்காகவே கிளாஸ் சி.எம்.டி. என்ற புரோகிராம் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு சின்ன புரோகிராம்; எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தலாம்; இதைக் கம்ப்யூட்டரில் பதிந்து, அதன் மீது டபுள்கிளிக் செய்தால், சிஸ்டம் ட்ரேயில், கடிகாரம் பக்கத்தில் அமர்ந்து கொள்கிறது.உங்களுடைய கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோவினை, ஊடுறுவிச் செல்லும் கண்ணாடியாக மாற்றுகிறது. இது உங்கள் கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோவினை மாற்ற வில்லை. அதனை பின்புறம் உள்ள பொருட்களைக் காட்டும் கண்ணாடியாக மாற்றுகிறது. இந்த புரோகிராமினைhttp://komalo.deviantart.com/art/GlassCMDforVista121457868 என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக இறக்கிக் கொள்ளலாம். இது ராம் மெமரியில் எடுத்துக் கொள்ளும் இடம் 1 எம்பிக்குக் குறைவாக உள்ளதால், தாராளமாக எடுத்துப் பயன்படுத்தலாம்.

4. பயர்பாக்ஸ் கண்ணாடி (Glassy Firefox):

பயர்பாக்ஸ் பிரவுசரின் மிகப் பெரிய பலம் அது தரும் பாதுகாப்பு; அதற்கு அடுத்தபடியாக, அதன் ரசிகர்கள் கூட்டம். பல கம்ப்யூட்டர் தொழில் நுட்ப வல்லுநர்கள் தீம்ஸ், எக்ஸ்டென்ஷன்ஸ் என்ற பெயரில் பல அரிய, வேடிக்கையான மற்றும் கூடுதல் பயன்தரும் புரோகிராம்களை உருவாக்கி அவற்றை ஆட் ஆன் தொகுப்புகளாகத் தருகிறார்கள். நியோவின் (Neowin) என்பவர் அம்ப்ரூஸ்(Ambroos) என்னும் கிளாஸி பயர்பாக்ஸ் தீம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதனைப் பதிந்து இயக்க 64 பிட் விண்டோஸ் இயக்கத் தொகுப்பு இருக்க வேண்டும். ஜிமெயில் செக்கர் இருக்க வேண்டும்.
இதற்கெல்லாம் ஒத்துக் கொண்டால், நீங்கள் இதனை இலவசமாக டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடலாம். இது பயர்பாக்ஸ் தளத்தில் கிடைக்கவில்லை. கிடைக்கும் முகவரிhttp://www.neowin.net /forum/index.php?s=ee8053c 1716233beb4b6dcb3715500cc&showtopic=7 46714

5. நோட்பேட் கண்ணாடி (Transparent Notepad): கிளாஸ் சிஎம்டி போல இது இருந்தாலும் சற்று வித்தியாசமான ஊடுறுவும் கண்ணாடியில் இயங்குவது போல நோட்பேடினை இந்த புரோகிராம் அமைக்கிறது. மற்ற புரோகிராம் போல, ஜஸ்ட் ஒரு கண்ணாடி இன்டர்பேஸ் தராமல், மொத்த நோட்பேட் புரோகிராமினையும் ஒரு கிளாஸ் தட்டில் அமைக்கிறது. ஒரு விதத்தில் வேர்ட்பேட் போலவும் செயல்படுகிறது. அனைத்து பைல்களையும் ஆர்.டி.எப். (.rtf) பார்மட்டில் சேவ் செய்கிறது. இருப்பினும் டி.எக்ஸ்.டி. (.txt) அல்லது எச்.டி.எம்.எல். (.html) பார்மட்டில் சேவ் செய்திடும் ஆப்ஷனையும் தருகிறது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://sourceforge.net /projects/transnote/

6. கிளாஸ் 2கே (Glass 2K):

மற்ற புரோகிராம்கள் போல் கண்ணாடி போன்ற எபக்ட் தராமல், சற்று ஒளி ஊடுருவும் வகையில் இது விண்டோ வினை அமைக்கிறது. ஒவ்வொரு விண்டோவினையும் இவ்வாறு செயல்படுத்துகிறது. தற்போதைக்கு விண்டோஸ் 2000 மற்றும் எக்ஸ்பியில் மட்டும் செயல்படுகிறது. இதைச் செயல்படுத்தும்போது 'Runtime DLL/OCX File error' போன்ற எர்ரர் ஏற்பட்டால், இந்த புரோகிராம் கிடைக்கும் தளத்தில் இதற்கான தீர்வுகளும் கிடைக்கின்றன.

உங்கள் கம்ப்யூட்டர் தூங்கி வழிகிறதா? பாயும் குதிரையாய் பல மாதங்களுக்கு முன் ஓடிய விண்டோஸ் இப்போது தவழ்கிறதா? ஒவ்வொரு டாகுமெண்ட்டும், ஒர்க்ஷீட்டும் எடிட் செய்து பிரிண்ட் எடுக்கும் முன் போதும் போதும் என்றாகிறதா? கவலைப்படாதீர்கள். சில விஷயங்களைக் கவனித்தால் போதும். வேகமாக ஓடாவிட்டாலும், நமக்கு எரிச்சல் தராத வேகத்தில் விண்டோஸ் இயங்கும். அவற்றை இங்கு காண்போம்.
கம்ப்யூட்டர் வேகமாகவும் அனைத்து திறனுடனும் இயங்க வேண்டும் என்றால், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மட்டும் மீண்டும் மீண்டும் ட்யூன் செய்து பயனில்லை. அதிக வேகம் தரக்கூடிய ஹார்ட்வேர் பாகங்கள் இணைக்கப்பட வேண்டும். இந்த வகையில் நாம் முன்னுரிமை தர வேண்டியது ராம் மெமரி மற்றும் கிராபிக்ஸ் கார்டு ஆகும். இவற்றை நாமே இணைப்பதாக இருந்தால், நம் உடலில் இருக்கும் ஸ்டேடிக் மின்சாரம் கம்ப்யூட்டரின் நுண்ணிய பாகங்களுக்குக் கடத்தாமல் இருக்கும் வகையில் அதனை வேறு உலோகங்களைத் தொடுவதன் மூலம் டிஸ்சார்ஜ் செய்திடலாம்.

ராம் மெமரி பலவகைகளில் கிடைக்கிறது. டி.டி.ஆர்2, டி.டி.ஆர்.3 மற்றும் பல பழைய வகைகளில் உள்ளது. தற்போது வரும் கம்ப்யூட்டர்களின் மதர்போர்டுகள் குறிப்பிட்ட வகை ராம் சிப்களை மட்டுமே ஏற்றுக் கொள்ளும். எனவே கம்ப்யூட்டருடன் தரப்பட்ட குறிப்பேட்டினைப் பார்த்து, எந்த வகை ராம் சிப்பினை மதர் போர்டு ஏற்றுக் கொள்ளும் எனப் பார்க்கவும். உங்கள் மெமரியினை 4 ஜிபிக்கு மேல் உயர்த்துவதாக இருந்தால் ஆப்பரேட்டிங் சிஸ்டம் 64 பிட் சிஸ்டமாக இருக்க வேண்டும். விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் 64 பிட் வகையில் கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்தலாம்.

நீங்கள் கம்ப்யூட்டரை அடிக்கடி கேம்ஸ் விளையாடப் பயன்படுத்தாமல் இருந்தாலும், அதிக திறன் கொண்ட கிராபிக்ஸ் கார்டு ஒன்றை கம்ப்யூட்டரில் நிறுவுவது நல்லது. குறிப்பாக விண்டோஸ் 7 மற்றும் விஸ்டா அவற்றின் யூசர் இன்டர்பேஸ் திரைகளின் காட்சித் தோற்றங்களைச் சிறப்பாக அமைத்திருப்பதால், கிராபிக்ஸ் கார்டு அதிக திறனுடன் இருப்பது இவற்றின் பயனை நன்கு நமக்குத் தரும்.
உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ் பி, விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 என எதுவாக இருந்தாலும், இதனுடன் ஒட்டிக் கொள்ளும் தேவையற்றவைகளை, அவ்வப்போது நீக்குவது, இவற்றின் வேகமான செயல்பாட்டை உறுதி செய்திடும்.

தேவையற்ற செயல்பாடுகள், செயல்படுத்தாத ஸ்டார்ட் அப் புரோகிராம்களை நீக்கவேண்டும். இதனால் விண்டோஸ் தன் சக்தியை இவற்றில் ஈடுபடுத்தாமல், தேவைப்படும் புரோகிராம்களில் மட்டுமே பயன்படுத்த வழி கிடைக்கும்.

விண்டோஸ் எக்ஸ்பியில், சிஸ்டம் கண்ட்ரோல் பேனலைத் திறந்திடவும். அதில் அட்வான்ஸ்டு (Advanced) டேப்பில் கிளிக் செய்திடவும். பின் செட்டிங்ஸ் (Settings) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் அட்ஜஸ்ட் பார் பெஸ்ட் பெர்பார்மன்ஸ் என்ற ரேடியோ பட்டனைக் கிளிக் செய்திடவும். இதனால் மெனுவின் கீழாக ட்ராப் ஷேடோ போன்ற அலங்கார வேலைப்பாடுகள் நீக்கப்படும்.

விஸ்டாவில் சைட் பார் செயல் இழக்கச் செய்வதன் மூலம், இந்த செயல்பாட்டினை மேற்கொள்ளலாம். விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில் ஏரோ (Aero) சூழ்நிலையை நிறுத்துவதன் மூலம், கம்ப்யூட்டரின் மெமரியையும், செயல்திறன் சக்தியையும் (Processing Power) மேம்படுத்தலாம். இதற்கு டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து, காண்டெக்ஸ்ட் மெனுவில் பெர்சனலைஸ் (Personalize) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். விஸ்டாவில் விண்டோ கலர் அண்ட் அப்பியரன்ஸ் (Window Color and appearance) என்பதை கிளிக் செய்து அதில் எனேபில் ட்ரான்ஸ்பரன்ஸி (Enable Transparency) என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் விண்டோஸ் 7 பேசிக் (Windows 7 Basic) என்ற தீமைத் தேர்ந்தெடுக்கவும்.

நாம் அடிக்கடி இணையத்தில் பார்க்கும் பல புரோகிராம்களை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துவிடுகிறோம். இவற்றை இன்ஸ்டால் செய்கையில், சிஸ்டம் தொடங்கும்போதே, அவற்றைத் தொடங்கும் வகையிலும் அமைத்துவிடுகிறோம். இதனால் நமக்குத் தேவையான, அன்றாடம் பயன்படுத்தப்படுகின்ற (எம்.எஸ். ஆபீஸ், பேஜ்மேக்கர், போட்டோ ஷாப் போல) புரோகிராம்களின் இயக்க வேகம் பாதிக்கப்படுகிறது. முதலில் சொல்லப்பட்ட பயன்படுத்தாத பல புரோகிராம்கள், இவற்றின் பின்னணியில் இயங்குவதே இதற்குக் காரணம்.

விண்டோஸ் 7 மற்றும் விஸ்டாவில், ஸ்டார்ட் கிளிக் செய்து சர்ச் புரோகிராம்ஸ் அண்ட் பைல்ஸ் (Search Programs and Files) என்ற பீல்டில் msconfig என டைப் செய்து என்டர் தட்டவும். சிஸ்டம் கான்பிகரேஷன் (System Configuration) விண்டோ இப்போது கிடைக்கும். இவற்றில் உள்ள டேப்களில் Startup என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இனி கட்டளை (Command) பிரிவில் உங்களுக்குத் தேவைப்படாத புரோகிராம் உள்ளதா எனப் பார்க்கவும். எடுத்துக் காட்டாக, ஐட்யூன்ஸ் (iTunes) வந்த காலத்தில் அதனைப் பதிந்திருக்கலாம். இதனால் iTuneshelper.exe மற்றும் QTTask.exe என்ற இரு பைல்கள் இயங்கியவாறு இருக்கும். இவற்றினால் எந்த பயனும் தனியாக இல்லை. இது போன்ற தேவையற்ற புரோகிராம்கள் ஸ்டார்ட் அப்பில் இயக்கப்படுவதைத் தடுக்கலாம். இதனால் ராம் மெமரி இடம் காலியாகி, அவசியமான புரோகிராம்கள் வேகமாக இயங்க வழி கிடைக்கும்.

சிஸ்டம் இன்னும் சுறுசுறுப்பாக இயங்க, அடிக்கடி சி டிரைவின் விண்டோஸ் டைரக்டரியில், டெம்பரரி போல்டரில் உள்ள பைல்களைக் காலி செய்திட வேண்டும். ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கியவுடன் இவற்றைக் காலி செய்திட வேண்டும். அல்லது சேப் மோடில் சென்று இவற்றைக் காலி செய்திடலாம். இதனால் பயன்படுத்தாத பைல்கள் பட்டியலில் உள்ள கடைசி பைல் வரை நீக்க முடியும். இதற்கு ஏற்கனவே இந்த பகுதியில் விரிவாகச் சொல்லப்பட்ட சிகிளீனர் போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தலாம்.

இதில் இன்னும் ஒன்றைக் கவனிக்கலாம். ஏதேனும் ஒரு புரோகிராமினை, கம்ப்யூட்டர் இயக்கத்திலிருந்து அறவே நீக்க, அதனுடன் தரப்பட்டிருக்கும் அன் இன்ஸ்டால் பைலைப் பயன்படுத்துகிறோம். விண்டோஸ் 7ல் அன் இன்ஸ்டால் செயல்பாட்டுக்கென ஒரு சிறிய புரோகிராம் பைல் தரப்பட்டுள்ளது. ஆனால் இவற்றைப் பயன்படுத்தினாலும் சில பைல்கள் கம்ப்யூட்டரில் ஒட்டிக் கொண்டுதான் இருக்கும். அறவே அனைத்து பைல்களை நீக்க சில தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றில் ரெவோ அன் இன்ஸ்டாலர் (Revo Uninstaller from http://www.pcworld.c...nloads/file/fid,66703order,6page,1/description.html) என்னும் புரோகிராம் சிறப்பானதாகும். இதனை இலவசமாக இறக்கிப் பயன்படுத்தலாம். இந்த புரோகிராம், குறிப்பிட்ட புரோகிராமின் அன் இன்ஸ்டால் பைலைப் பயன்படுத்தியே அனைத்து பைல்களையும் நீக்குகிறது. பின் மேலும் ஒரு படி சென்று சிஸ்டத்தை ஸ்கேன் செய்து, ரெஜிஸ்ட்ரியைத் தேடிப் பார்த்து, நீக்கப்படும் புரோகிராம் சார்பான அனைத்தையும் நீக்குகிறது.

ஆன்லைன் கேம்ஸ், ஸ்ட்ரீமிங் மீடியா புரோகிராம்கள், இன்டர்நெட் போன் சர்வீசஸ், பிட் டாரண்ட் போன்ற டவுண்லோடிங் புரோகிராம்கள் ஆகியவை அதிக அளவில் டேட்டாவினைக் கையாளுவதால், நெட்வொர்க் பேண்ட் அளவில் அதிக இடத்தை எடுத்துக் கொள்கின்றன. எனவே இவற்றைத் தேவைப்படும்போது மட்டும் இயக்கி, மற்ற நேரத்தில் இயங்கா நிலையில் வைத்திட வேண்டும்.

ஹார்ட் டிரைவ் ஒன்றை, அது உள்ளே இணைப்பதாயினும் அல்லது வெளியே வைத்து இயக்குவதாயினும், தேர்ந்தெடுக்கையில் அதன் இயக்க வேகம் அதிக பட்சம் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளவும். உள்ளே வைத்து இயக்கும் இன்டர்னல் டிரைவ் மற்றும் வெளியே வைத்து, இணைத்து இயக்கும் எக்ஸ்டெர்னல் டிரைவ் என இரு வகைகள் தற்போது அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

வெளியில் வைத்து பயன்படுத்தும் டிஸ்க் டிரைவ்களில் பல நன்மைகள் உண்டு. உங்கள் டேட்டாவினை நீங்களே பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். டேட்டா பேக்அப் செய்வதற்கு பாதுகாப்பானதாகும். உள்ளிருந்து இயக்கக் கூடிய டிஸ்க்குகளில் சடா (SATA) வகை இணைப்புகள் சிறந்தவை ஆகும். அடுத்ததாக eSATA எனச் சொல்லப்படும் வேகம் கொண்டவை, யு.எஸ்.பி. அல்லது பயர்வேர் டிரைவ்களைக் காட்டிலும் வேகம் கொண்டவையாகும். ஆனால் இவற்றைப் பயன்படுத்த ஒரு ஆட் ஆன் கார்ட் தேவைப்படும். தற்போது 7,200 ஆர்.பி.எம். வேகத்திற்குக் குறைவாக எந்த ஹார்ட் டிஸ்க்கும் இயங்குவதில்லை. 10,000 மற்றும் 15,000 ஆர்.பி.எம். வேக டிரைவ்கள் கிடைக்கின்றன. ஆனால் சற்று கூடுதலாகப் பணம் கொடுத்து வாங்க வேண்டியதிருக்கும். தற்போது அறிமுகமாகிப் பரவி வரும் சாலிட் ஸ்டேட் டிஸ்க், கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு அதிக வேகம் தரும். ஆனால் இவை இன்னும் குறைவான விலையில் கிடைப்பதில்லை.

கம்ப்யூட்டர் செயல்படும் வேகத்தினை பிரிண்டர்களும் தாமதப்படுத்துகின்றன. அச்சின் தன்மையைச் சற்றுக் குறைவாக வைத்துக் கொண்டால், கம்ப்யூட்டரின் செயல்பாடு வேகம் அதிகரிப்பதோடு, அச்சிடும் மையும் மிச்சப்படும்.

இணைய தளங்களை அச்சிடுகையில், அந்த பக்கத்தில் காணப்படும் விளம்பரங்கள், கிராபிக்ஸ் படங்கள் கம்ப்யூட்டரின் செயல்பாட்டினை மந்தப்படுத்தும். எனவே இந்த படங்கள் இல்லாமல் அச்சிடுவதே நல்லது.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் நீங்கள் பயன்படுத்துவதாக இருந்தால், அதில் டூல்ஸ், இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் (Tools, Internet Options) தேர்ந்தெடுக்கவும். இந்த விண்டோவில் அட்வான்ஸ்டு (Advanced) டேப் கிளிக் செய்திடுக. பின் கிடைக்கும் விண்டோவில் மல்ட்டிமீடியா பிரிவிற்குச் செல்லவும். அதில் �ஷா பிக்சர்ஸ் (Show Pictures) என்று இருப்பதன் எதிரே உள்ள பெட்டியில் இருக்கும் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
பயர்பாக்ஸ் பிரவுசரில் டூல்ஸ், ஆப்ஷன்ஸ் (Tools, Options) தேர்ந்தெடுத்து, கிடைக்கும் விண்டோவில் கண்டென்ட் (Content) டேப்பில் கிளிக் செய்திடவும். Load Images Automatically என்று இருப்பதன் எதிரே உள்ள டிக் அடையாளத்தை நீக்கவும். இந்த இரண்டு பிரவுசர்களிலும் ரெப்ரெஷ் பட்டனை அழுத்தி இணையப் பக்கங்களை படங்கள் இல்லாமல் இறங்கும்படி பெற்று, பின் பிரிண்ட் கட்டளை கொடுக்க வேண்டும். அச்சடித்து முடித்த பின் மீண்டும் மேலே காட்டியுள்ள இடங்களுக்குச் சென்று மீண்டும் கிராபிக்ஸ் படங்களைப் பெறுவதற்கான மாற்றங்களை ஏற்படுத்தவும். குறிப்பிட்டுள்ள வழிகள் அனைத்தும் கம்ப்யூட்டரின் செயல்பாட்டின் வேகம் குறைகையில் நாம் எடுக்க வேண்டிய சில நடவடிக்கைகளாகும். இவற்றை ஓரிரு முறை எடுத்தால் மட்டும் போதாது. தொடர்ந்து அடிக்கடி இந்த செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் வேகம் இழந்த கம்ப்யூட்டர் தொடர்ந்து பழைய கூடுதல் வேகத்தில் இயங்கும்.

எந்த கண்ணியிலும் Hard disk தான் மிக வேகம் குறைந்த பகுதியாகும். இது அதன் capacity ஐ பொறுத்து மாறுபடும். hard disk ஐ பராமரிப்பதும் இலகு அல்ல . இதனாலேயே கணணி டெக்னிசியன்ஸ் களால் அடிக்கடி hard disk ஐ Defragment செய்யுங்கள் என அறிவுறுத்தப்படுவீர்கள்.
விண்டோஸ் இல் ஏற்கனவே இருக்கும் டிஸ்க் Defragmentation டூல் கொண்டு இதைச் செய்தால் மிக மெதுவாகவே Defragment செயற்பாடு இருக்கும். இதை சற்றே அதிக வேகத்துடன் செய்வதற்கெனவும் வீட்டுப்பாவனையாளர்களுக்கு இலவசமாகவும் Auslogics Disk Defrag டூல் கிடைக்கிறது.

பாரம் குறைந்த பயன்படுத்த இலகு வானதுமான Disk Defrag 3 ஒரு டிஸ்க் ஒப்டிமைசராகவும் செயற்படும். மற்றைய புரோகிராம்ஸ் இயங்கும் போதும் இது அதிக கணணி வளத்தை எடுக்காமல் background இல் இயங்கக் கூடியது. மேலும் கணனியின் எவ்வளவு வீதம் டிஸ்க் usage ஐ பாவிக்க வேண்டும் என்பதையும் இதில் அஜெஸ்ட் செய்யலாம்.

டவுண்லோட் செய்ய

http://download.cnet...j=dl&tag=button


இணையத்தில் உலா வருகையில் உங்களுக்கான இலவச புரோகிராம்கள் நான்கு என்ற தலைப்பில் சில புரோகிராம் களின் பட்டியல் கிடைத்தது. இவை அனைவருக்கும் உதவும் புரோகிராம்களாக இருந்தது மட்டுமின்றி, பலரும் எதிர்பார்க்கும் அப்ளிகேஷன்களாகவும் இருந்தன. கீழே அவை குறித்த தகவல்கள் தரப்படுகின்றன.

1. பயர்பாக்ஸை வேகப்படுத்த:
யார் தான் தங்கள் பிரவுசர் வேகமாக இயங்கி நாம் பார்க்க விரும்பும் தகவல்களை விரைவாகவும், நல்ல முறையிலும் , சிறப்பாகவும் டவுண்லோட் செய்திட வேண்டும் என எதிர்பார்க்க மாட்டார்கள். மற்ற பண்புகள் இல்லாவிட்டாலும் வேகமாக இயங்க வேண்டும் என நாம் அனைவருமே எதிர்பார்க்கலாம். இதனைSpeedyFox என்ற புரோகிராம் நமக்குத் தருகிறது. இது முதலில் பயர்பாக்ஸ் தொகுப்பை வேகமாக நம் சிஸ்டத்தில் இயக்கக் கொண்டு வருகிறது. பிரவுசிங் ஹிஸ்டரி மற்றும் குக்கிகளை வழக்கத்தைக் காட்டிலும் விரைவாகச் செயல்படுத்துகிறது. இதனைhttp://www.crystalidea.com/speedyfox என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

2. சிஸ்டத்திற்குள் சிஸ்டம்:
ஒரே கம்ப்யூட்டரில் இரண்டு சிஸ்டங்கள் இருந்தால், பூட் செய்கையில் எந்த சிஸ்டத்தில் நுழைய என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டு, நம் ஆப்ஷனைக் கேட்கும் ஒரு விண்டோ தரப்படும். ஐ ரிபூட் (iReboot) என்ற புரோகிராம் விண்டோஸ் தொடங்கிய பின்னரும் அதனுள்ளாக இன்னொரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குவதற்கான ஆப்ஷனைத் தருகிறது. அப்படி ஆப்ஷன் தரும் சிஸ்டம் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையிலும் உள்ளது. விண்டோஸ் இயங்கிய பின் இது சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்து கொள்கிறது. அதனைக் கிளிக் செய்தால் நமக்கு ஆப்பரேட்டிங் சிஸ்டம் தேர்வு செய்திட ஆப்ஷன்ஸ் தருகிறது. இதிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்தால், தேர்ந் தெடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் கம்ப்யூட்டர் நுழைந்து கொள்கிறது. இதைப் போன்ற ஒரு வசதி, விண்டோஸ் 7 உட்பட, எந்த விண்டோஸ் சிஸ்டத்திலும் தரப்படவில்லை. இதனைப் பெற http://neosmart .net/dl.php?id=11 என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.

3. விண்டோஸ் நேரம்:
கம்ப்யூட்டரை எவ்வளவு நேரம் நீங்கள் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று அறிய வேண்டுமா? அல்லது வேறு எவரேனும் செயல்பட்ட காலத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? விண்டோஸ் ஆக்டிவிட்டி மானிட்டர் (Windows Activity Monitor) என்ற புரோகிராம் நமக்கு இந்த வழியில் உதவுகிறது. ஒவ்வொரு விண்டோவும் எவ்வளவு நேரம் இயங்கியுள்ளது என்ற தகவலை நமக்குத் தருகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோ என்றால் பயன்படுத்திய நேரத்தினை வரைபடமாகவும் தருகிறது. விண்டோக்களை நாம் இணைத்தும் காணலாம். "Work", "School", "Fun" எனப் பிரிவுகளாகவும் இணைத்துக் காணலாம். குழந்தைகள் நம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதாக இருந்தால், இத்தகைய கண்காணிப்புகள் அவர்கள் கம்ப்யூட்டரிலும் இன்டர்நெட்டிலும் என்ன செய்கிறார்கள் என்பதைக் காட்டும். இந்த புரோகிராமினை http://code.google .com/p/wamon/ என்ற முகவரியில் நீங்கள் பெறலாம்.

4: ஈஸி பைல் லாக்கர் (Easy File Locker):

எத்தனையோ வாசகர்கள் அவர்களின் கடிதங்களில் பைல்களை எப்படி மற்றவர்கள் அணுகாமல் பாதுகாப்பது என்று கேள்விகளை அனுப்பி வருகின்றனர். நாமும் அவர்களுக்குப் பலமுறை பல வழிகளைச் சொல்லி வந்திருக்கிறோம். இந்த புரோகிராம் சரியாகத் தன் பெயருக்கேற்றபடியான வேலைகளைச் செய்கிறது. இந்த புரோகிராம் பைல்களை லாக் செய்வது மட்டுமின்றி, மற்றவர் கண்களிலிருந்து மறைக்கவும் செய்கிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இதனை எந்த பாஸ்வேர்டும் இன்றி இது செயல்படுத்துகிறது. அந்தக் கால விண்டோஸ் 95 தொகுப்பில் செயல்படுவது போல இது செயல்படுகிறது. கருப்பு பின்னணியில் வெள்ளை பட்டன்களுடனும், பைல்களை ட்ராக் அண்ட் ட்ராப் வழியில் கொண்டு வரும் வசதிகளுடனும் செயல்படுகிறது. இதனைப் பெறhttp://www.xoslab.com/ என்ற முகவரிக்குச் செல்லவும்.

http://www.ip-adress.com/ip_tracer/

******************************

இணைய முகவரியை மறைப்பதற்கான சிறு கருவி..


http://www.hideyouri...de_ip_download/


********************

இணைய முகவரியை மாற்ற சில வழிமுறைகள்(manually)


1. http://whatismyipadd...e-my-ip-address

2. http://whatismyipadd...e-my-ip-address

ப்ளுடூத்(Bluetooth) மென்பொருள் இல்லாத கணனியில் கோப்புக்களை (files) இடமாற்ற(Transfer) செய்ய ஒரு விசேட வழி உண்டு…
இது யாருக்கும் தெரியாமல் மறைந்து கிடக்கிறது.

விண்டோசில் (Windows XP) மறைந்து இருக்கும் ப்ளுடூத்ப்ளுடூத்(Bluetooth) மென்பொருள் இல்லாத கணனியில் கோப்புக்களை (files) இடமாற்ற( Transfer) செய்ய ஒரு விசேட வழி உண்டு…
இது யாருக்கும் தெரியாமல் மறைந்து கிடக்கிறது.

விண்டோசில் (Windows XP) மறைந்து இருக்கும் ப்ளுடூத்(Bluetooth) மென்பொருளை கண்டுபிடிக்க இதோ வழி………………..

start சென்று Run இல் fsquirt என தட்டச்சு செய்து Enter கொடுங்கள் (start—> Run)
இப்பொழுது Bluetooth File Transfer Wizard என்ற விண்டோ திறக்கும். இந்த wizard ஐ பயன்படுத்தி
உங்கள் Bluetooth சாதனத்தில் (Device) இல் கோப்புக்களை இடமாற்றம் செய்யலாம். மென்பொருளை கண்டுபிடிக்க இதோ வழி..

start சென்று Run இல் fsquirt என தட்டச்சு செய்து Enter கொடுங்கள் (start—> Run)
இப்பொழுது Bluetooth File Transfer Wizard என்ற விண்டோ திறக்கும். இந்த wizard ஐ பயன்படுத்தி
உங்கள் Bluetooth சாதனத்தில் (Device) இல் கோப்புக்களை இடமாற்றம் செய்யலாம்.

TweetMyPC நீங்கள் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் வீட்டுக் கணினியை இயக்குவதை சாத்தியமாக்கிறது.

இணையத்தளமூடக உங்கள் வீட்டுக் கணினியை இயக்க இது உதவுகிறது இந்தTweetMyPC .
TweetMyPC வேறு இடத்தில் நீங்கள் இருந்தாலும் Twitter ஊடாக உங்கள் கணினியை இயக்க உதவுகிறது.

1. இதற்காக வெறுமேனே உங்கள் கணினியில் இந்த செயலியை தறவிறக்கம்( Download) செய்யவும்..

2.
பின்னர் http://www.Twitter.com
என்ற தளத்துக்கு சென்று புதிய டியூட்டர் (Twitter) கணக்கு ஒன்றை ஆரம்பிக்கவும். இக் கணக்கு TweetMyPC க்கு மட்டும் பிரத்தியோகமானது

{Go to www.Twitter.com and create a new Twitter account for your PC (This is optional as TweetMyPC only responds for updates). This account will be used by TweetMyPC to monitor for new tweets}

3. உங்கள் பயனாளர் கணக்கை பெயர் , கடவுச்சொல் கொடுத்து TweetMyPC இயக்கவும். சற்று தாமதித்து இரட்டை சொடுக்குகள் மூலம் Twitter ஐ இயக்கி TweetMyPC ஐ ஆரம்பிக்கவும்.

{Start TweetMyPC and then fill in the login details. Wait for some time for the application to verify your login details & Double click the Twitter Icon to start TweetMyPC }

அதே பயனாளர் கணக்குடன் எங்கிருந்தாவது உள் நுளையும்போது உங்கள் கணினியை நிறுத்தவோ ( Shutdown ) செய்யவோ மீள் ஆரம்பம்(Restart) செய்யவோ முடிகிறது.

உங்கள் "ஹார்ட் டிஸ்க்" வேறு எவருக்கேனும் விற்பனை செய்யும் போது அதில் உள்ள கோப்புகளை சுத்தமாக அழித்து விட்டு கொடுப்பீர்கள். அழிக்கும் போது Shift + Delete பயன்படுத்தினால் சுத்தமாக அழிந்துவிடும் என்று நினைத்து அழிப்பார்கள்.

ஆனால் இப்போது அழித்தவற்றை மீட்டு எடுக்கும் மென்பொருள்கள் கொண்டு (Recovery Software ) அழித்த கோப்புகளை திருடிவிட முடியும்.

அதனால் கோப்புகளை அழிக்கும் போதும் அல்லது ஹார்ட் டிஸ்கை Format செய்யயும் போதும் இந்த மென்பொருள்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும். இந்த மென்பொருள்களை கொண்டு அழித்தால் மறுபடியும் கிடைக்காதவாறு செய்துவிடும்...  



தரவிறக்கம் செய்ய கீழே அழுத்தவும்
1. Killdisk

2. Eraser

 
வீடியோ கோப்புகளை பொருத்தவரையில் பல பல வகைகள் உள்ளன.. அவை எல்லாம் ஒர் பிளேயரில் பிளெ செய்ய வேண்டும் என்றால் அதற்கான கோட்டிக்ஸ் கள் அந்த கணிணியில் ஏற்கனவே நிறுவபட்டு இருக்க வேண்டும்..

உதாரணத்திற்கு சில
divx.avi.dat.vob mpg...

வின் விஎல் சி போன்ற பிளேயர்கள்.. சில கோட்க்ஸ் களை தன்னுள்ளே வைத்து கொண்டே கணிணியில் நிறுவும் போது நுழைவதால் பெரும்பாலான பார்மெட்டுகள் வேலை செய்கின்றன.ஆனால் அதிலும் கூட சில விடுபடக்கூடும்..

என்ன செய்ய முடியும்?

அவ்வாறன சூழ் நிலையில் அந்த கோடிக்ஸ்கள் இணையத்தில் தனித்தனியாகவே பெரும்பாலும் கிடைகின்றன. அதை ஒவ்வொன்றாக தேடி கணிணியில் நிறுவதற்குள் பலருக்கு தாவு தீர்ந்துவிடும்.. பலர் ஏதோ கணிணி அல்லது கொடுத்த சி.டி டிவிடி யில் கோளாறு என்று வீசவும் கூடும்.. அதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டும் விதமாகவும் அதே சமயத்தில் அனைத்தையும் ஒர் இடத்தில் கிடைக்கும் வகையிலும் இரண்டு தொகுப்புகள் எனக்கு தெரிந்த வகையில் உள்ளன.. அவை ஆல் இன் ஒன் கோடிக்ஸ் மற்றும் எப்.எப்.டி சோ


இவை இரண்டில் ஒன்றை கணிணியில் நிறுவினால் போதும் பெரும்பாலான வீடியோ பிளேயர்கள் அதன் பார்மெட்டில் பிளே ஆக ஆரம்பிக்கும்..

இலவசமாக அது கிடைக்கும் இணைப்புகள்..

http://www.free-code...ow_download.htm
                                                   http://www.free-code...ck_All_In_1.htm

(இதை பல ஆண்டி வைரஸ்கள் மேல்வேர் உள்ளதாக கூறும்)

பையன் ஒருவன் தனது நோட்புக் கம்பியூட்டரை எமது நிலையத்திற்கு கொண்டுவந்தான். தான் வேலை செய்துகொண்டிருக்கும்போது கம்பியூட்டரின் காட்சி (Display) 90 பாகை வலது புறமாக திரும்பி கிடக்கை நிலையில் (Horizontal) உள்ளது. முயன்று பார்த்தும் தன்னால் சீர்செய்ய முடியவில்லை என்றான்.

கம்பியூட்டரை இயக்கி டெஸ்க்ரொப் ஐ பார்த்தோம். My Computer, My Document, Recycle Pin ஆகிய எல்லாம் வரிசையில் மேலிருந்து கீழ் என்பதற்கு பதில் வலமிருந்து இடமாக கிடந்தன. Task Bar நெடும் குத்தாக இடதுகரை ஓரமாக கிடந்த்து. Start Button இடதுகை மேல்மூலையில் காணப்பட்டது,

சரி இப்போ என்ன வழி? நோட்புக் கணினி என்பதால் Graphic Cards ஏதும் கிடையாது. கிடந்தாலாவது அதன் Properties க்கு போய் இடதுபுறம் rotate பண்ணுவதற்கு ஏதாவது option உண்டாவென பார்க்கலாம். Video வும் இணைந்த Intetgrated Motherboard தான் இக்கணினிகளில் உண்டு. இருந்தாலும் அதன் Display Properties க்கு போய் பார்த்தோம். உதவக்கூடியமாதிரி எதுவும் காணப்படவில்லை. Help Topics இலிருந்தும் ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை.

Display Turned Sideways என Google லில் அடித்து தேடினோம். விடை உள்ள சில வெப்தளங்களை அது தேடித்தந்தது. அதில் ஒன்றில் விடை கிடைத்தது. அதன்படி CTRL + ALT + UP-ARROW ஆகிய மூன்றையும் ஒன்றுசேர அழுத்தியவுடன் கிடக்கையில் கிடந்த காட்சி நிமிர்ந்தெழுந்து நெடுங்குத்தாக நின்றது, எமது பிரச்சனையும் தீர்ந்தது.

மேலும் சில தகவல்கள்:

CTRL +ALT + UP-Arrow = இடதுபுறமாக 90 பாகை திரும்பும்
CTRL +ALT + Right- Arrow = வலதுபுறமாக 90 பாகை திரும்பும்
CTRL +ALT + Down-Arrow = வலதுபுறமாக 180 பாகை திரும்பும்
CTRL +ALT + LEFT-Arrow = வலதுபுறமாக 270 பாகை திரும்பும்

வீட்டிலே கிடந்த இன்னொரு கணினியில் Trial பார்ப்போமென எண்ணி இந்த Key combination களை அடித்து கிடக்கைகு Display ஐ .வீழ்த்த முயன்றேன். எந்த கீ கம்பினேஷன்களை அடித்தும் எந்த பக்கமும் திரும்பமாட்டேன் என்றது. இந்த கணினியில் Sticky Keys enable பண்ணுபடாமல் இருக்கலாம்.

நோட்புக்கணினியில் Sticky Keys enable பண்ணுபட்டிருக்கலாம். அதனால்தான் பையன் கணினியை பாவிக்கும்போது Sticky Keys களை தெரியாமல தவறுதலாக அடித்துவிட்டிருக்கின்றான். Sticky Keys என்பது CTRL, ALT, SHIFT என்பதாகும்.

(எனக்கு தெரிந்தவரை முதலில் பாட்டிசன்களை உருவாக்கவேண்டும்(ஆனால் O/S வேறுபட்ட இரண்டை பயன்படுத்தும்போது தானாக பாட்டிசன் நடைபெறும்.)

பதில்: எந்த ஒரு O/S மும் நிறுவப்படும்போது தானாக பாட்டிஷனை உருவாக்காது. ஆனால் XP & Win 2000 ஐ பொறுத்தவரை ஹாட்டிஸ்க்கின் விபரங்களை தந்து, என்ன செய்யவேண்டும் என கேட்டு (எமது வேலையை இலேசாக்குகிறது) தானே அதன்படி செய்யும். ஆனால் Win 98 ல் format & Partioning வேலையை நாம் அதிகம் manual ஆகவே செய்யவேண்டும். ஒரு பாட்டிஷனில் இரண்டு O/S களையும் நிறுவமுடியும் என்பதும் கவனிக்கத்தக்கது (இரண்டு வெவ்வேறு போல்டர்களில்). ஆனால் இது புத்திசாலிதனமானது அல்ல. ஒரு வீட்டில் இரு குடும்பங்கள் வசிப்பது போன்று: உரசல்கள் அடிக்கடி வரலாம்.
இரண்டு O/S களை நிறுவும்போது முதலில் வெளிவந்ததை முதலிலும் அடுத்து வந்ததை பின்புமாக நிறுவவேண்டும். உ.ம்: Win 2000 முதலிலும் XP ஐ பின்புமாக நிறுவவேண்டும். அப்போதுதான் கம்பியூட்டர் பூட் பண்ணும்போது எந்த O/S ஆரம்பிப்பது என்று கேட்டு தெரிவு செய்யும்படி இரண்டு O/S ஐயும் பட்டியலிட்டு தரும்.