தேடல்

Tamil Radio Stations

எட்டுத் திக்கும் தமிழ் பரப்பும் தமிழ் வானொலிச் சேவைகள்

பையன் ஒருவன் தனது நோட்புக் கம்பியூட்டரை எமது நிலையத்திற்கு கொண்டுவந்தான். தான் வேலை செய்துகொண்டிருக்கும்போது கம்பியூட்டரின் காட்சி (Display) 90 பாகை வலது புறமாக திரும்பி கிடக்கை நிலையில் (Horizontal) உள்ளது. முயன்று பார்த்தும் தன்னால் சீர்செய்ய முடியவில்லை என்றான்.

கம்பியூட்டரை இயக்கி டெஸ்க்ரொப் ஐ பார்த்தோம். My Computer, My Document, Recycle Pin ஆகிய எல்லாம் வரிசையில் மேலிருந்து கீழ் என்பதற்கு பதில் வலமிருந்து இடமாக கிடந்தன. Task Bar நெடும் குத்தாக இடதுகரை ஓரமாக கிடந்த்து. Start Button இடதுகை மேல்மூலையில் காணப்பட்டது,

சரி இப்போ என்ன வழி? நோட்புக் கணினி என்பதால் Graphic Cards ஏதும் கிடையாது. கிடந்தாலாவது அதன் Properties க்கு போய் இடதுபுறம் rotate பண்ணுவதற்கு ஏதாவது option உண்டாவென பார்க்கலாம். Video வும் இணைந்த Intetgrated Motherboard தான் இக்கணினிகளில் உண்டு. இருந்தாலும் அதன் Display Properties க்கு போய் பார்த்தோம். உதவக்கூடியமாதிரி எதுவும் காணப்படவில்லை. Help Topics இலிருந்தும் ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை.

Display Turned Sideways என Google லில் அடித்து தேடினோம். விடை உள்ள சில வெப்தளங்களை அது தேடித்தந்தது. அதில் ஒன்றில் விடை கிடைத்தது. அதன்படி CTRL + ALT + UP-ARROW ஆகிய மூன்றையும் ஒன்றுசேர அழுத்தியவுடன் கிடக்கையில் கிடந்த காட்சி நிமிர்ந்தெழுந்து நெடுங்குத்தாக நின்றது, எமது பிரச்சனையும் தீர்ந்தது.

மேலும் சில தகவல்கள்:

CTRL +ALT + UP-Arrow = இடதுபுறமாக 90 பாகை திரும்பும்
CTRL +ALT + Right- Arrow = வலதுபுறமாக 90 பாகை திரும்பும்
CTRL +ALT + Down-Arrow = வலதுபுறமாக 180 பாகை திரும்பும்
CTRL +ALT + LEFT-Arrow = வலதுபுறமாக 270 பாகை திரும்பும்

வீட்டிலே கிடந்த இன்னொரு கணினியில் Trial பார்ப்போமென எண்ணி இந்த Key combination களை அடித்து கிடக்கைகு Display ஐ .வீழ்த்த முயன்றேன். எந்த கீ கம்பினேஷன்களை அடித்தும் எந்த பக்கமும் திரும்பமாட்டேன் என்றது. இந்த கணினியில் Sticky Keys enable பண்ணுபடாமல் இருக்கலாம்.

நோட்புக்கணினியில் Sticky Keys enable பண்ணுபட்டிருக்கலாம். அதனால்தான் பையன் கணினியை பாவிக்கும்போது Sticky Keys களை தெரியாமல தவறுதலாக அடித்துவிட்டிருக்கின்றான். Sticky Keys என்பது CTRL, ALT, SHIFT என்பதாகும்.

1 கருத்துரைகள்

  1. Unknown // May 11, 2013 at 8:47 PM  

    Yes. Intel HD Graphics driver install panniruntha keys ah mathi vachukkalam

Post a Comment